அஜித்குமார் லாக்அப் டெத்: போலீஸ் ஆடியோ அதிர்ச்சி thirupuvanam ajith kumar case | Nihitha new video
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் கஸ்டடியில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்க வைத்துள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்ற பெண் கொடுத்த திருட்டு புகாரின் பேரில் அஜித் குமாரை விசாரித்த க்ரைம் டீம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து துன்புறுத்தினர். இதில் தான் அவர் மரணம் அடைந்தார். லாக்அப் டெத்துக்கு காரணமாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அஜித்குமார் திருடவில்லை. அவன் அப்பாவி என்று பல தரப்பினரும் சொல்லி வருகின்றனர். இதற்கிடையே புகார் கொடுத்த நிகிதாவின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நிகிதாவுக்கு எதிராக கொடுத்த பேட்டி திருப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே நிகிதா மூஞ்சை மூடிக்கொண்டு பேசும் வீடியோவும் வெளியானது. சம்பவத்தின் போது அஜித் குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக வீடியோவில் சொல்லி இருந்தார். இதனால் உண்மையில் என்ன நடந்தது என்ற குழப்பம் ஏற்பட்டது. பலரும் நிகிதா மீது சந்தேகம் கிளப்பினர். உடனே திருமங்கலத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு அவர் தலைமறைவானார். இந்த நிலையில் தான் இப்போது பரபரப்பு சம்பவம் நடந்து இருக்கிறது. அதாவது, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஓட்டலில் தனது அம்மாவுடன் நிகிதா இருப்பதை சிலர் பார்த்தனர். போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விவரம் கேட்ட போலீசார், கடைசியில் அவரை விட சொல்லி இருக்கின்றனர். ‛2 மணி நேரம் நிகிதாவை லாக் பண்ணி வச்சி இருந்தோம் சார். ஆனா கன்ட்ரோல் ரூமுல இருந்தவங்க விட சொல்லிட்டாங்க. இப்ப அவங்க கார் கோவை நோக்கி போய்கிட்டு இருக்குது என்று இன்னொரு போலீசாரிடம் சம்மந்தப்பட்டவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. பொள்ளாச்சி பகுதி ஓட்டலில் நிகிதா தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோவும், அவர் வந்த கார் படமும் வெளியாகி இருக்கிறது.