உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருத்தணி கோயிலுக்கு வந்த பக்தருக்கு மாரடைப்பு | Thiruthani murugan temple | Devotee heart attack |

திருத்தணி கோயிலுக்கு வந்த பக்தருக்கு மாரடைப்பு | Thiruthani murugan temple | Devotee heart attack |

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூச திருவிழா காலை முதல் களை கட்டியது. ஆயிரக்கணக்கான் பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். காஞ்சிபுரம் ஆர்.சி. மங்கலத்தை சேர்ந்த தச்சு தொழிலாளியான 34 வயது பாபு, 10 வயது மகனுடன் சாமி தரிசனம் செய்ய திருத்தணி பஸ் ஸ்டாண்டு வந்தார். அங்கிருந்து மலை கோயிலுக்கு படிகள் வழியாக செல்ல சன்னதி தெருவில் நடந்து சென்றார். அப்போது திடீரென பாபு மயங்கி சாலையில் விழுந்தார். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் பாபுவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பாபுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதிபடுத்தினர். அதை கேட்டு பாபுவின் மனைவி, மகன் இருவரும் கதறி அழுதது பார்ப்பவர் நெஞ்சை பதற வைத்தது. சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ