வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கஞ்சா இருக்கா? என்று கேட்ட அந்த 200 ரூபாய் ஊபீஸ் கொத்தடிமையை ஸாரி சபாநாயகரைக் கண்டா வரச் சொல்லுங்க. அவரை கையோட கூட்டிக் வாருங்க.
சிறுவன் உட்பட 6 பேரை தூக்கிய போலீஸ்: சென்னையை உலுக்கும் வேட்டை | Thiruvanmiyur | GanjaArrest
தமிழகத்தில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் தலைதூக்கி வரும் நிலையில், அதனால் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்ஐ புகாரி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது 2 வடமாநில இளைஞர்கள் சாக்கு மூட்டைகளுடன் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அவர்களை அழைத்த போலீசார் மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் திரிபுராவை சேர்ந்த முகமது ஷாஜாகான் மற்றும் 17 வயது இளைஞன் என்பது தெரிய வந்தது. மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து சப்ளை செய்துள்ளனர். வழக்கம் போல ரயில் மூலம் கடத்தி வந்த கஞ்சாவை திருவான்மியூரில் இருந்து பூந்தமல்லி கொண்டு செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது தான் போலீசிடம் சிக்கி உள்ளனர். இருவரும் மீதும் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல சென்னை திரு.வி.க நகர் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சத்தியா, மணி, சூரிய பிரகாஷ், அஸ்வின் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. 4 பேரும் புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடக்க இருந்த சைக்கோ மியூசிக் பார்ட்டியில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் ஐடி ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #ChennaiPolice #Thiruvanmiyur #GanjaSmuggling #TamilNaduNews #PoliceAction #GanjaRaid #NDPSAct #CrimeNews #ChennaiCrime #Arrested
கஞ்சா இருக்கா? என்று கேட்ட அந்த 200 ரூபாய் ஊபீஸ் கொத்தடிமையை ஸாரி சபாநாயகரைக் கண்டா வரச் சொல்லுங்க. அவரை கையோட கூட்டிக் வாருங்க.