/ தினமலர் டிவி
/ பொது
/ தி.மலை கிராமத்தில் முஸ்லிம் கல்லறையால் பிரச்னை Thiruvannamalai |muslim Burial Ground issue
தி.மலை கிராமத்தில் முஸ்லிம் கல்லறையால் பிரச்னை Thiruvannamalai |muslim Burial Ground issue
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த எரும்பூண்டி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம், ஐந்தரை ஏக்கர் உள்ளது. இதில், 2 ஏக்கர் பரப்பளவில், அரசு பள்ளி இயங்குகிறது. இன்னும் 2 ஏக்கர் முஸ்லிம் கல்லறையாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பு காலியாக உள்ளது. முஸ்லிம்கள் கல்லறையாக பயன்படுத்தப்படும் நிலத்தை ஒட்டி 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் விவசாய பொருட்களை கல்லறை வழியாகத்தான் விவசாயிகள் கொண்டு சென்று வந்தனர்.
ஜன 23, 2025