உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர்களின் ஈகோவால் மதுரை மேயரை தேர்வு செய்வதில் இழுபறி |Thiyagarajan vs Moorthi| madurai mayor

அமைச்சர்களின் ஈகோவால் மதுரை மேயரை தேர்வு செய்வதில் இழுபறி |Thiyagarajan vs Moorthi| madurai mayor

மதுரை மேயராக இருந்த இந்திராணி, சொத்துவரி முறைகேடு புகார் எதிரொலியாக பதவியை ராஜினாமா செய்தார். அவரது கணவர் பொன் வசந்த், மாநகராட்சி அலுவலர்கள் என உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் 5 மண்டலம், 2 நிலைக் குழு தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் இல்லாத மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. புதிய மேயரை தேர்வு செய்வதில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே மோதல் போக்கு தொடர்கிறது. பரப்பளவில் பெரிய மாநகராட்சியான மதுரையில் உள்ள 100 வார்டுகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடுகள் என ஏராளமான பிரச்னைகள் நிலவுகிறது. மேயர் இல்லாத நிலையில் அதை தீர்க்க முடியாத நிலை உள்ளது. இதனால், ஆளும்கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சட்டசபை நெருங்கும் நிலையில், இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், திமுக தரப்பில் ஒருவரை மேயராக்க வேண்டும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். மேயரை நியமிக்க கட்சித் தலைமை தயாராக இருந்தாலும், அமைச்சர்களுக்குள் தொடரும் மோதல்போக்கால், நியமனத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றனர்.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ