உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்தின் பகீர் பின்னணி! முழு ரிப்போர்ட்! Thoothukudi | Arunachalam | Custo

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்தின் பகீர் பின்னணி! முழு ரிப்போர்ட்! Thoothukudi | Arunachalam | Custo

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம். வயது 26. தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி, டாஸ்மாக்கை மூடிய பிறகு சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக கூறி, அவரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அன்றைய தினமே அருணாச்சலத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி, அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து 6 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அருணாச்சலம் உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அருணாச்சலம் தனது குடும்பத்தினரிடம், போலீசார் தன்னை தாக்கினர் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகினது. #தூத்துக்குடி #Thoothukudi #ThoothukudiNews #அருணாச்சலம் #Arunachalam #BreakingNews #TamilNews #LatestNews #TamilBreakingNews #Police #TNPolice #CustodyDeath #CustodialDeath #CCTV #ViralVideo #TamilNadu #Justice #JusticeForArunachalam #NewsUpdate #TodayNews #Dinamalar #DinamalarNews #TrendingNews #LiveNews #Tamil

ஜூலை 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ