/ தினமலர் டிவி
/ பொது
/ கஞ்சா கும்பலால் அரங்கேறியதா பகீர் சம்பவம்? | Thoothukudi | Ganja gang | Police Investigation
கஞ்சா கும்பலால் அரங்கேறியதா பகீர் சம்பவம்? | Thoothukudi | Ganja gang | Police Investigation
வெளியே தெரிந்த கை! அண்ணன், தம்பிக்கு சோகம் தூத்துக்குடியில் இரட்டை சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் அருகே பண்டுகரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு 3 மகன் 3 மகள் என 6 குழந்தைகள். ஐந்தாவது மகன் அருள்ராஜ், வயது 30. சில வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் பார்வையை இழந்து திருமணம் செய்யாமல் வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். மூத்த மகன் மாரி பாண்டி வயது 36. அடிக்கடி கூலி வேலைக்கு வெளியே சென்று சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. சென்ற 27ம் தேதி மாரி பாண்டி, தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.
ஆக 01, 2025