உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துரைப்பாக்கம் சம்பவத்தில் பகீர் வாக்குமூலம் | Thoraipakkam crime case | Manikandan | chennai police

துரைப்பாக்கம் சம்பவத்தில் பகீர் வாக்குமூலம் | Thoraipakkam crime case | Manikandan | chennai police

மொத்த சென்னையையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது துரைப்பாக்கம் கொலை சம்பவம். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணை டேட்டிங் ஆப் மூலம் வரவழைத்து உல்லாசம் அனுபவித்த இளைஞன், பின்னர் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடூர கொலையை செய்த மணிகண்டன் என்ற இளைஞனை போலீசார் கைது செய்து விட்டனர். அவன் கொடூத்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது. இந்த கொலை பற்றியும், மணிகண்டன் கைது பற்றியும் பல திடுக்கிடும் புதிய தகவல்கள் இப்போது வெளியாகி அதிர வைத்துள்ளன. அப்படி என்ன நடந்தது என்பதை போலீசார் விவரித்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் வயது வெறும் 26 தான். அவன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளான். அவனது சொந்த ஊர் சிவகங்கை. 2 மாதம் முன்பு பெருங்குடி கார் நிறுவனம் ஒன்றில் அவனுக்கு வேலை கிடைத்தது. இதற்காக சென்னை வந்தான் மணிகண்டன். அவனது அக்காள் துரைப்பாக்கம் குமரன் குடில் நகரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். மணிகண்டனும் அங்கு தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தான். 16ம் தேதி குடும்பத்துடன் சிவகங்கை சென்றார் மணிகண்டனின் அக்கா. வீட்டில் தனியாக இருந்த மணிகண்டனுக்கு சபலம் தட்டியது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !