திபெத் பூகம்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு | Tibet earthquake | India earthquake
2025ன் முதல் பயங்கர பூகம்பம் திபெத்தில் மரண ஓலம் 100ஐ கடந்தது பலி ஆசிய நாடான திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நில நடுக்கம் இந்தியா, நேபாளம், பூடான் வரை எதிரொலித்தது. திபெத்தில் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 6 முறை பூமி அதிர்ந்ததில் வீடுகள் குலுங்கி சரிந்தன. மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். குறிப்பாக திபெத்தின் 2வது பெரிய நகரமான 8 லட்சம் மக்கள் வசிக்கும் ஷிகாட்சேவை சுற்றியுள்ள நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. 100க்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.