திருச்செந்தூர் கொடூரம்... செஞ்சது எல்லாமே 15 வயசு பசங்க | tiruchendur manikandan case | kavin case
திருச்செந்தூர் ஆலந்தலை சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் வயது 24. எல்கட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார் மணிகண்டன். அலந்தலையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். தோப்பூர் விலக்கு பகுதியில் வந்த போது, அவரை 3 பேர் கும்பல் அரிவாளுடன் வழிமறித்தது. பதறிப்போன மணிகண்டன், பைக்கை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அந்த கும்பலும் விடாமல் விரட்டியது. உயிர் பிழைக்க அங்கிருந்த மரக்கடை ஒன்றுக்குள் தஞ்சம் புகுந்தார் மணிகண்டன். ஆனாலும் விடாத கும்பல், உள்ளே புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது. கழுத்து மற்றும் தலை பகுதியில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த மணிகண்டன் இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார், மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் 3 பேரின் முகமும் பதிவாகி இருந்தது. அவர்கள் திருச்செந்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 3 பேருமே சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார், கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்தனர்.