திருச்செந்தூர் கோயில் யானை 2 பேரை தாக்கியது ஏன்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை, தமது பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை தூக்கிபோட்டு மதித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யானைக்கு இருவரும் பழம் கொடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. வன அலுவலர்கள் யானையை பார்வையிட்டனர். பெண் யானைக்கு மதம் பிடிக்காதே, பிறகு ஏன் இப்படி நடந்து கொண்டது என்பது பற்றி அறிய முற்பட்டனர். அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது, செல்பி எடுக்க முயன்றபோதுதான் யானை தாக்கியது தெரிந்தது.
நவ 18, 2024