உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூரில் அதிகாரி-போலீஸ் அடிதடி-ஷாக் | tiruchendur temple issue|police-officer clash video

திருச்செந்தூரில் அதிகாரி-போலீஸ் அடிதடி-ஷாக் | tiruchendur temple issue|police-officer clash video

இன்று விடுமுறை நாள் என்பதாலும், பவுர்ணமி என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். முதியவர்களுக்கான வரிசையில் குலசேகரப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டு பிரபாகரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த பகுதிக்கு கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால், சிறிது நேரம் ஆட்களை அனுமதிக்க வேண்டாம் என்பதற்காக பேரிகார்டை நகர்த்தினார். பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு, எப்படி பேரிகார்டை நகர்த்தலாம் என்று கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விவேக்கை காலால் எட்டி உதைத்தார் ஏட்டு. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செப் 07, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 10, 2025 14:53

சென்னை, திருவான்மியூரில் கூட சாமானிய மக்களை கடற்கரை போன்ற பொது இடத்தில் மிரட்டி, எட்டி உதைக்கும் காவலர்கள் உண்டு. பணத்தை கொடுக்காமல் போக விட மாட்டார்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை