உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு பள்ளியில் அதிர வைக்கும் சம்பவம்! காரணம் என்ன? | Tiruchi Govt School | Tiruchi Govt School Incid

அரசு பள்ளியில் அதிர வைக்கும் சம்பவம்! காரணம் என்ன? | Tiruchi Govt School | Tiruchi Govt School Incid

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இன்று மாலை கடைசி பாட வகுப்பை 12ம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் சிவகுமார் எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாஸ்க் அணிந்து உள்ளே வந்த ஒரு மாணவன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஒரு மாணவனை கையில் வெட்டினான். ஆசிரியர் சிவக்குமார் தடுக்க சென்ற போது அவர் தலையிலும் வெட்டு விழுந்தது. இருவரையும் வெட்டி விட்டு அந்த மாணவன் பள்ளியிலிருந்து தப்பி ஓடினான். காயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதற்கு கொடுத்த கமெண்ட்டால் இரண்டு மாணவர்களுக்கும் மோதல் முற்றியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஸ்ரீரங்கம் தாசில்தார் தமிழ்செல்வன் வெட்டுப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியரை நேரில் சந்தித்து விசாரித்தார். தப்பி ஓடிய உயிரியல் பிரிவு 12ம் வகுப்பு மாணவனை ஸ்ரீரங்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை