உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறுதி சடங்கின் போது ஷாக் ஆன குடும்பம்! | Tiruchi Old Lady Viral Video

இறுதி சடங்கின் போது ஷாக் ஆன குடும்பம்! | Tiruchi Old Lady Viral Video

திருச்சி துவரங்குறிச்சியை அடுத்த வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள், வயது 60. இரண்டு நாட்களுக்கு முன் பூச்சி மருந்து குடித்த இவர் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் இறக்கும் தருவாயில் இருந்த அவரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டில் அவர் இறந்ததாக கருதி அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்துக்கு கொண்டு சென்றனர். இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது திடீரென சின்னம்மாள் கண் விழித்தார். அருகில் இருந்த உறவினர்கள் பயத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தனர். சின்னம்மாள் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ