உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பு பார்த்த பயங்கரவாத வேலை-ஷாக் தகவல் | NIA Raid | hizb ut tahrir terrorist

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பு பார்த்த பயங்கரவாத வேலை-ஷாக் தகவல் | NIA Raid | hizb ut tahrir terrorist

திருச்சியில் பயங்கரவாத பயிற்சி திடுக்கிட வைத்த அப்துல் ரஹ்மான் NIA விசாரணையில் ஷாக் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சமீபத்தில் ரெய்டு நடத்தினர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் வயது 26, முஜிபுர் ரஹ்மான் வயது 46 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்துல் ரஹ்மான் அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்தது. அவர் போலீசில் கூறியது: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரான ஹமீது உசேன், எங்களுக்கு தலைவனாக செயல்பட்டார். அவர் பிஎச்டி முடித்தவர். அண்ணா பல்கலையிலும் சில காலம் பேராசிரியராக வேலை பார்த்தார். அவர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது தொடர்பாக, எனக்கும் முஜிபுர் ரஹ்மானுக்கும் பயிற்சி அளித்தார். முஜிபுர் ரஹ்மான் எங்கள் ஊரில் அரிசி அரவை ஆலை வைத்துள்ளார். அங்கு வரும் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து வந்தோம். தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களாக நாங்கள் செயல்பட்டோம். திருச்சியை மையமாக வைத்து ரகசிய கூட்டங்கள் நடத்தினோம். இதற்காக என் உறவினர் ஒருவருக்கு சொந்தமான இடம் ஒன்றை பயன்படுத்தி வந்தோம்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை