மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் வைத்த கோரிக்கை | Tirumala Tirupati Devasthanam
திருமலை வான்வழியில் விமானம் பறக்க தடை? தேவஸ்தானம் எழுதிய கடிதம் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் பி.ஆர். நாயுடு, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஏழுமலையான் கோயில் ஆகம சாஸ்திரத்தின்படி, கோயிலின் புனிதம், பாதுகாப்பு, பக்தர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, திருமலை வான்வழியை விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். திருமலை பகுதி மலைகளில் தாழ்வாக பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளால் ஏழுமலையான் கோயிலை சுற்றியுள்ள புனிதமான, அமைதியான சூழலுக்கு இடையூறு ஏற்படுகிறது. திருமலை வான்வழியை விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிப்பது திருமலையின் புனிதத்தன்மை, கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். இந்த கோரிக்கையை பரிசீலித்து அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அமைச்சரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் பி.ஆர்.நாயுடு கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.