உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடும்பத்தை பழிதீர்க்க பெண் செய்த பகீர் சம்பவம்

குடும்பத்தை பழிதீர்க்க பெண் செய்த பகீர் சம்பவம்

திருநெல்வேலி, ராதாபுரம் அருகே உள்ள ஆத்து குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். கூலி தொழிலாளி. இவரது 3வயது மகன் சஞ்சய் வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தான். அங்கன்வாடிக்கு அழைத்து செல்வதற்காக மகனை தேடியபோது, சிறுவன் மாயமாகி இருந்தான். எல்லா இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். விக்னேஷ் குடும்பத்துக்கும் எதிர் வீட்டு பெண் தங்கம்மாளுக்கும் முன்பகை இருப்பதால், சிறுவனை அவர் கடத்தியிருக்கலாம் என போலீசிடம் கூறப்பட்டது. தங்கம்மாள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அவர்கள் அதிர்ந்து போயினர். வீட்டுக்குள் இருந்த வாஷிங் மிஷினில், காணாமல் போன சிறுவனின் சடலம் சாக்கு பையில் மூட்டையாக கட்டி மறைத்து வைத்து இருந்தது. இதை அறிந்த தங்கம்மாள் அங்கிருந்து தப்பியோட முயன்றார். கிராம மக்கள் உதவியுடன் போலீசார் அவரை கைது செய்தனர். தெரியாமல் செய்துவிட்டதாக அவர் போலீசாரிடம் கெஞ்சினார். சிறுவன் கொலை செய்யப்பட்டதை அறிந்த குடும்பத்தார் கதறி அழுதனர்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை