போலீசை மிரட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு; நெல்லையில் பரபரப்பு Tirunelvelli| petrol bomb
திருநெல்வேலி தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்த 5 பேர் கும்பல், பெட்ரோல் குண்டு வீசியது. அது, ஸ்டேஷன் முன்பு இருந்த கோயில் வளாகத்தில் விழுந்து தீப்பற்றியது. தப்பி ஓடிய கும்பல், திருநெல்வேலி- மதுரை சாலையில் கரையிருப்பு பகுதியில் உள்ள சோதனை சாவடி மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசியது. இதே போல், மானூர் சாலையில் தென்கலம் என்ற இடத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இதை செய்தவர்கள் யார் என்பது தெரியவந்தது. முன்னதாக, தச்சநல்லூர் அருகே காட்டு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றபோது, கஞ்சா மற்றும் அரிவாள்கள் வைத்திருந்த அருண்குமார், ஹரிஹரசுதன் ஆகியோரை கைது செய்தனர்.