/ தினமலர் டிவி
/ பொது
/ எ.வ.வேலு பேசிய கூட்டத்தில் பிரியாணி சண்டையால் பரபரப்பு tirupathur|dmk|E.V.velu|fight|biriyani
எ.வ.வேலு பேசிய கூட்டத்தில் பிரியாணி சண்டையால் பரபரப்பு tirupathur|dmk|E.V.velu|fight|biriyani
திருப்பத்தூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள நந்தினி மஹாலில் நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி வாகை சூட தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும் என்றார். கூட்டம் முடிந்ததும் திமுகவினருக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. டைனிங் ஹாலில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. போட்டிருந்த டேபிள் எல்லாம் ஃபுல் ஆகிவிட்டது. இதனால் சில தொண்டர்கள் பிரியாணியை வாங்கி தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
செப் 19, 2024