உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்டோவில் போராடிய இளம்பெண்: திருப்பத்தூரில் சம்பவம்l tirupathur young woman sexual harrasment auto

ஆட்டோவில் போராடிய இளம்பெண்: திருப்பத்தூரில் சம்பவம்l tirupathur young woman sexual harrasment auto

திருப்பத்துார் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 27). ஆட்டோ டிரைவர். நேற்றிரவு திருப்பத்தூர் ஜின்னா ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான். அப்போது, 28 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆட்டோைவை, கையை காட்டி நிறுத்தும்படி சொன்னார். அருள்ராஜா தனியார் மருத்துவமனை அருகே உள்ள பகுதிக்கு செல்லவேண்டும் என கூறி ஆட்டோவில் ஏறினார். அப்போது ஆட்டோ டிரைவர் சங்கர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இளம்பெண் சொன்ன வழியில் செல்லாமல் வேறு வழியாக சங்கர் ஆட்டோவை ஓட்டினான். சந்தேகமடைந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் எங்கே செல்கிறாய்? என கேட்டார். ஷார்ட் கட்டில் செல்வதாக கூறினான். ஆனால், தொடர்ந்து வேறு வழியில் ஆட்டோ சென்றதால் டிரைவர் சங்கருடன் இளம்பெண் சண்டை போட்டார். ஆட்டோவை நிறுத்து... திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டார். ஆனால் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை. அதற்குள் ஆட்டோவை ஆளில்லாத புதர் பகுதிக்கு சங்கர் ஓட்டிச் சென்றான். அங்கு, ஆட்டோவில் வைத்தே தகாத முறையில் நடக்க முயன்றான். இளம்பெண் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஆட்டோ டிரைவருடன் போராடினார். அவனை பிடித்து தள்ளி விட்டார். உடனே சங்கர், பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டான். ஆட்டோவில் இருந்து பெண்ணை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றான். இதில் காயமடைந்த இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கு போலீசார் விரைந்தனர். பெண் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் நகர போலீசார் துரித கதியில் விசாரணையை துவங்கினர். பெண்ணின் செல்போன் டவர் லொகேஷனை கண்டுபிடித்தனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே டவர் சிக்னல் காட்டியது. போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று ஆட்டோ டிரைவர் சங்கரை கைது செய்தனர். செல்போனை பறிமுதல் செய்தனர். இரவு நேரத்தில் ஆட்டோவில் ஏறிய பெண்ணை டிரைவர் கடத்திச் சென்றது திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல வேறு பெண்களிடம் தகாத முறையில் ஆட்டோ டிரைவர் சங்கர் நடந்தானா என போலீசார் துருவித்துருவி விசாரிக்கின்றனர்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை