உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 31 காத்திருப்பு அறைகளை தாண்டி நீளும் வரிசை | Tirupati | Tirumala Tirupati Devasthanams

31 காத்திருப்பு அறைகளை தாண்டி நீளும் வரிசை | Tirupati | Tirumala Tirupati Devasthanams

20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் பக்தர்கள் கடலில் மூழ்கிய திருப்பதி! கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சனியன்று ஒரே நாளில் மட்டும் 95 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 3.47 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம், 300 ரூபாய் டிக்கெட் எடுத்தவர்கள் 5 மணி நேரம், சர்வ தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ற வகையில் தேவஸ்தான நிர்வாகமும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது. பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக 2000க்கும் அதிகமான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி ஆகிய அடிப்படை தேவைகளை செய்து கொடுக்கின்றனர்.

ஜூன் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !