/ தினமலர் டிவி
/ பொது
/ ஆறுதல் கூற ஒரே நேரத்தில் பவன்-ஜெகன் வந்ததால் பரபரப்பு tirupati crowd| TTD| chandrababu| pawan| jagan
ஆறுதல் கூற ஒரே நேரத்தில் பவன்-ஜெகன் வந்ததால் பரபரப்பு tirupati crowd| TTD| chandrababu| pawan| jagan
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் இலவச தரிசன டோக்கன் வாங்க நேற்று பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா, கோவையை சேர்ந்த நிர்மலா உட்பட 6 பேர் இறந்தனர். காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆறுதல் கூறினார். பின் பேட்டி அளித்த அவர், வைகுண்ட ஏகாதசி ஒருநாள் தான். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்து பக்தர்களை அனுமதிக்கின்றனர். இது தொடர்பாக தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறினார்.
ஜன 09, 2025