/ தினமலர் டிவி
/ பொது
/ பக்தர்களின் நம்பிக்கையில் விளையாட வேண்டாம்; கோர்ட் உத்தரவு | Tirupati laddu row | Supreme Court | Sp
பக்தர்களின் நம்பிக்கையில் விளையாட வேண்டாம்; கோர்ட் உத்தரவு | Tirupati laddu row | Supreme Court | Sp
ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். இது நாடு முழுதும் பூதாகரமாக வெடித்து பல விமர்சனங்கள் உருவாகின. இந்த விவகாரத்தை விசாரிக்க ஆந்திர அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. கோர்ட் கண்காணிப்பில் விசாரணை கோரி, பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.
அக் 04, 2024