திருப்பதியில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்: உண்மை இதுதான் | Tirumala Tirupati Devasthanam
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களுக்காக கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் அன்னதான சத்திரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் இறந்துவிட்டடதாக தகவல் பரவி வருகிறது. அது உண்மையல்ல என திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி இரவு கர்நாடகாவின் மடிகேராவை சேர்ந்த சிறுவன் திருமலை அன்னபிரசாத சத்திரத்தில் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தபோது மயங்கி விழுந்தான். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சிறுவனை திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், சிறுவன் திருப்பதியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு அங்கு இறந்தான்.