உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதி லட்டு விவகாரம்; நாயுடு ஆட்சியில் தான் இப்படி jegan mohan| chandrababu naidu| tirupathi lad

திருப்பதி லட்டு விவகாரம்; நாயுடு ஆட்சியில் தான் இப்படி jegan mohan| chandrababu naidu| tirupathi lad

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், ஜெகன் மோகன் ஆட்சியில் கலப்படம் செய்யப்பட்டதாக தற்போதைய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததுடன், லட்டு பிரசாதம் தரமற்று இருந்ததாக, கடந்த ஜூலையில் வெளியான ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெகன் மோகன், மத விஷயங்களை முதல்வர் சந்திரபாபு அரசியல் ஆக்குவதாக கூறினார். சந்திரபாபு நாயுடு ஜூன் 12ல் முதல்வராக பதவியேற்றார். ஜூலை 17ல் சப்ளை செய்யப்பட்ட நெய்யை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்தது. அந்த அறிக்கை தான் அது. கடந்த 2 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தார். இப்போது மட்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது ஏன்? முதல்வர் சந்திரபாபுவின் 100 நாள் ஆட்சியில் சொல்லக்கூடிய சாதனைகள் எதுவும் இல்லை. மக்கள் கோபத்தில் உள்ளனர். தேர்தலில் கொடுத்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதி என்ன ஆனது என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிர்வாக தோல்வியை திசை திருப்பவே நெய் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். லட்டு தயாரிக்க நெய் வாங்க ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர் விடப்படும். தேவஸ்தானம் வரையறுத்துள்ள கொள்கை முடிவின்படிதான் டெண்டர் விடப்பட்டு பொருட்கள் வாங்கப்படுகிறது. சப்ளையர்கள் NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழ் வழங்க வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் நெய் மாதிரிகளை சேகரிக்கிறது. தரத்தில் ஓகே செய்யப்படும் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எங்களது ஆட்சியில் சான்றிதழ் டெஸ்டில் தேர்ச்சி பெறாத நெய் சப்ளையை 18 முறை நிராகரித்துள்ளோம். முதல்வராக இருப்பவர் இப்படி பேசுவது சரியா? கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார். கடவுளை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் மோசமான மனநிலை சந்திரபாபுவுக்குதான் உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்மையை எப்படி திரித்தார் என்பது பற்றியும், இதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டும் பிரதமர் மோடி மற்றும் இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவேன் என்று ஜெகன் மோகன் கூறினார்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !