உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பகீர் கொள்ளை சம்பவம் கடைசி வரை தூங்கிய செக்யூரிட்டிகள்! | Tirupati Car showroom Theft | Robbery

பகீர் கொள்ளை சம்பவம் கடைசி வரை தூங்கிய செக்யூரிட்டிகள்! | Tirupati Car showroom Theft | Robbery

திருப்பதி ரேணிகுண்டா சாலையில் மாருதி கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் முகமூடி அணிந்த 4 பேர் பேர் ஷோரூமுக்குள் நுழைந்தனர். வெளியே செக்யூரிட்டி இருவர் இருந்தாலும் அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கொள்ளை கும்பலுக்கு கஷ்டமில்லை. எளிதாக உள்ளே புகுந்தனர். அந்த நேரத்தில் ஷோரூமில் விற்பனை நிர்வாகி பாலாஜி இருந்தார். அவரின் கை கால்களை கட்டிய கும்பல் மேனேஜரின் அறைக்கு சென்றது. அங்கு இருந்த லாக்கரை எடுத்து கொண்டு தப்பிச் சென்றனர்.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ