அழைக்காமலேயே வந்துட்டார்: ஆசிரியர்கள் அதிர்ச்சி | TIRUPATTUR | GOVERNMENT SCHOOL
திருப்பத்தூர் துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு மார்ச் 22ம் தேதி இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சுவிதாவின் கணவர் கணேஷ் என்பவரும் விழாவில் பங்கேற்றார். மேடையில் சினிமா பாடலை பாடினார். கணேஷ் மீது தமிழகத்தில் பல போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஒருமுறை 100 சவரன் தங்க நகை திருடப்பட்ட வழக்கில் ஆந்திர போலீசார் கை விலங்கு போட்டு கைது செய்து அழைத்து சென்றனர். இதுபோல பல்வேறு வழக்குகளில் கணேஷ் பலமுறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பிளாக் லிஸ்ட்டில் இருக்கும் குற்றவாளியான கணேஷ் அரசு பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றதும், விழா மேடையில் பாடியதும் சர்ச்சையானது.