உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக கவுன்சிலரை எதிர்த்து திரண்ட ஊர்: நள்ளிரவில் பரபரப்பு | Tiruppur | DMK Counselor

திமுக கவுன்சிலரை எதிர்த்து திரண்ட ஊர்: நள்ளிரவில் பரபரப்பு | Tiruppur | DMK Counselor

அங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மேளம் அடித்து, நடனம் ஆடி விமர்சியாக கொண்டாடினர். அப்போது அங்கு வந்த ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் பாலகிருஷ்ணன் அப்பகுதி மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. எங்க கோயிலுக்கு வந்து மேளம் அடிக்க சொன்னால் அடிக்க மாட்டீங்க. நீங்க மட்டும் உங்க கோயிலுக்கு மேளம் அடிப்பீங்களா என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்பகுதி மக்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாதி குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. பூபதி என்கிற இளைஞரை கவுன்சிலர் பாலகிருஷ்ணன் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திமுக கவுன்சிலரை கண்டித்து மங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை