வங்கதேச ஆர்டரும் இனி திருப்பூருக்கு? காத்திருக்கும் ஜாக்பாட் | Tiruppur | Tiruppur Export | Budget 2
பின்னலாடை ஏற்றுமதி மூலமாக திருப்பூர் பனியன் நிறுவனங்கள் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. உள்நாட்டு பனியன் உற்பத்தியிலும் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது. இப்போது பருத்தி நூல்களுக்கு மாற்றாக பனியன் நிறுவனங்கள் செயற்கை இழைகளுக்கு மாற ஆரம்பித்துவிட்டனர். இவை சீனா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வாங்கப்படுவதால் உற்பத்தி செலவு அதிகமாகி பின்னலாடைகளின் உள்நாட்டு வர்த்தகம் சரிந்தது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக பின்னலாடை தொழில் மீண்டும் ஏற்றம் காண துவங்கி உள்ளது. இனி வரப்போகும் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில் ஜவுளி தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும் என்கிறனர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.