உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் சிலிண்டர் வெடிப்பு சம்பவ பகீர் காட்சி Tiruppur cylinder blast video | tirupur blast cctv

திருப்பூர் சிலிண்டர் வெடிப்பு சம்பவ பகீர் காட்சி Tiruppur cylinder blast video | tirupur blast cctv

நடுங்க வைத்த சிலிண்டர் வெடிப்பு திருப்பூர் சம்பவ சிசிடிவியால் திடுக் ஐயோ... அம்மா... என அலறல் நள்ளிரவில் மக்கள் அதிர்ச்சி திருப்பூர் வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. 20 இயந்திரங்களுடன் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனம் இருக்கும் அதே கட்டடத்தின் பின் பகத்தின் அவரது வீடு இருக்கிறது. இரவு வழக்கம் போல் வேலை முடிந்து கம்பெனியை மூடி விட்டு, பின்னால் இருக்கும் வீட்டுக்கு சென்றார். குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டில் தீப்பற்றியது. குடும்பத்தின் அலறியடித்து எழும்பினர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. வீடு முழுவதும் வேகமாக தீப்பரவ ஆரம்பித்ததால் அங்கிருந்து வேகமாக வெளியேறினர். அந்த தீ அப்படியே கம்பெனி இருக்கும் கட்டடத்துக்கும் பரவியது. மிகப்பெரிய இழப்பு நேரும் என்று பயந்த இளங்கோ குடும்பத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க பார்த்தனர். அக்கம் பக்கத்தினரும் உதவி செய்தனர். ஆனால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டில் இருந்த சிலிண்டர் வெப்பம் தாங்க முடியாமல் வெடித்து சிதறியது. தீயை அணைத்துக்கொண்டிருந்தவர்கள், ஐயோ அம்மா என்று கூச்சலிட்டபடி சிதறி ஓடினர். சிலிண்டர் வெடித்த போது, வெடிகுண்டு வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டது. மொத்த கட்டடத்தையும் தீ கபளீகரம் செய்தது. சிலிண்டர் வெடிக்கும் காட்சி அப்படியே சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அது தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்த தீ விபத்து மற்றும் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இளங்கோவின் வீடும், கம்பெனி கட்டடமும் இடிந்து விழுந்தன. உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் சாம்பலாகின. 30 லட்சம் ரூபாய் அவருக்கு இழப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக யாருக்கும் பாதிப்பில்லை. இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி