தலைகீழாக மாறிய திருப்பூர் நிலை: மூக்கை பிடித்து செல்லும் பொதுமக்கள் | Tiruppur Garbage | Waste Manag
திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் தினமும், 800 மெட்ரிக் டன் அளவு குப்பை சேகரமாகிறது. அவை அங்குள்ள பயன்பாடற்ற கல்குவாரிகளில் கொட்டப்பட்டு வந்தது. குவாரி அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது. குப்பை கொட்டுவதற்கு இடமில்லாது மாநகராட்சி திணறி வரும் நிலையில், ரோடு ஓரங்கள், தெருக்களில் குப்பை கொட்டப்படுகிறது. குறிப்பாக பூ மார்க்கெட் பின்புற சாலையில் மாநகராட்சி குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 6 அடி உயரத்துக்கு மேல் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தாங்க முடியாத அளவுக்கு நாற்றம் வீசுகிறது. சிலருக்கு மயக்கம், கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உண்டாகிறது என பூ மார்க்கெட் வியாபரிகள் தெரிவித்தனர். #Tiruppur #GarbageCrisis #WasteManagement #TamilNadu #EnvironmentalIssue #SolidWaste #LegislativeAssembly #GreenTiruppur #EcoFriendly #PollutionControl