திருப்பூரை திணறடித்த கனமழை: மக்களின் துயர காட்சிகள் | Tiruppur heavy rain | Tiruppur flooding
திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் கன மழை பெய்தது. இதனால், நகரில் பல்வேறு ரோடுகளிலும் மழை நீர் வழிந்தோடியது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்கள், கழிவுகளால் நிரம்பி தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்துக் காணப்பட்டது. தெருக்களில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து ரோட்டில் பாய்ந்து பெரும் அவதியை ஏற்படுத்தியது. நொய்யல் ஆற்றிலும், நீரின் அளவு சற்று அதிகரித்தது. திருப்பூரை போலவே குன்னத்தூர் வெள்ளிரவெளி அடுத்த குழியங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து குளம் போல காட்சியளித்தது. வீட்டுக்கு வெளியே ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்படைந்தது. இதேபோன்று மயிலம்பாளையத்தில் உள்ள சிவன் நகர் குடியிருப்பிலும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தேவனம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் ஜெயக்கொடி என்பவரது வீட்டு சுவர் கனமழையால் இடிந்தது. குன்னத்தூர் குளம் நிரம்பி வழிவதால் அப்பகுதியில் மக்கள் பரிசலில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.