அக்கம்பக்கத்தினர் சொல்லும் அதிர்ச்சி தகவல் | Tirupur blast | Public Issue
திருப்பூர் பொன்னம்மாள்நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்யபிரியா. 2 குழந்தைகள் உள்ளது. அடுக்குமாடி வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செவ்வாயன்று மதியம் கார்த்திக் வீட்டில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் அலறியடித்தபடி வீட்டிக்குள் ஓடினார்கள். கார்த்திக் வீட்டுக்கு முன்னால் இருந்த மளிகை கடை, லைன் வீடுகள் இடிந்து கிடந்தது. 9 மாத குழந்தை உட்பட மூன்று பேர் ஸ்பாட்டில் இறந்தனர்.
அக் 09, 2024