வீல்சேரில் வந்த பெண் கவுன்சிலர் மேயருடன் வாக்குவாதம் Corporation Meeting | Admk Councilor Protest
திருப்பூர் மாநகராட்சி 30வது வார்டு அதிமுக கவுன்சிலர் புஷ்ப லதா. இவரது வார்டில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும் பல முறை மாநகராட்சி கூட்டத்தில் முறையிட்டார். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று மாநகரட்சி கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர் புஷ்பலதா, சாலை விபத்தில் சிக்கியவர் போல, தலை, கை, கால்களில் பேண்டேஜ் கட்டு போட்டு வந்தார். அவரை வீல் சேரில் உட்கார வைத்து தள்ளிக்கொண்டு வந்தனர். மோசமான சாலையால் விபத்துகள் நடப்பதை எடுத்து காட்டவே இந்த கெட்டப்பில் வந்தார். இதை பார்த்த சக கவுன்சிலர்கள், அவருக்கு உண்மையாகவே அடிபட்டு இருப்பதாக நினைத்து ஏமாந்து விட்டனர். மேயர் தினேஷும் அது உண்மையான காயங்கள் என நினைத்து, உங்களுக்கு என்ன ஆனது என்று அதிர்ச்சியுடன் கேட்டார். அது எல்லாமே டம்மி பேன்டேஜ் கட்டுகள் என தெரிந்ததும் டென்ஷன் ஆனார். எதற்காக இப்படி நாடகம் நடத்துகிறீர்கள் என மைக்கில் சத்தம் போட்டார். பதிலளித்த புஷ்பலதா என் வார்டில் சாலைகள் சரி செய்யப்படவே இல்லை. என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை; மக்கள் என்னை கேள்வியால் துளைக்கிறார்கள் என்றார்.