உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருத்தணியில் தணிந்த முருகனின் சீற்றம் - புஷ்பங்களால் பூஜை | Tiruttani Murugan Temple | Kanda Sashti

திருத்தணியில் தணிந்த முருகனின் சீற்றம் - புஷ்பங்களால் பூஜை | Tiruttani Murugan Temple | Kanda Sashti

முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணி தவிர திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை கோயில்களில் சூரசம்ஹாரம் நடக்கும். திருச்செந்தூரில் முருகன் சூரனை வதம் செய்ததை தொடர்ந்து திருத்தணியில் முருகனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. Breath கடும் சினம் கொண்டு சூரனை வதம் செய்த முருகன் சாந்தமடைய திருத்தணி மலை மீது அமர்ந்தார் என்பது ஐதீகம். இதனால் திருத்தணியில் சூரசம்ஹாரத்துக்கு பதிலாக, காவடி மண்டபத்தில் உள்ள முருகனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடத்தப்படும். இதனை முன்னிட்டு இன்று அதிகாலை திருத்தணி முருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மலர்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, முருகனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை செய்யப்பட்டது. #TiruttaniMurugan #KandaSashti #Pushpanjali #ShanmugaPeruman #MuruganTemple #TamilNaduTemples #SkandaSashti2026 #SpiritualFestival #DevoteesGathering #HRCE #ThiruvallurNews #TempleRituals #CurrentAffairs

நவ 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை