உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 12 மணி நேர தீவிர தேடுதல்! 3 பேரின் உடல்கள் மீட்பு | Tiruvannamalai landslide | landslide | Tiruvanna

12 மணி நேர தீவிர தேடுதல்! 3 பேரின் உடல்கள் மீட்பு | Tiruvannamalai landslide | landslide | Tiruvanna

கனமழையால் திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. 3 வீடுகள் மண் சரிவில் சிக்கியது. ஒரு வீடு முழுதும் மூழ்கியது. இதில் ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா. உறவினர் குழந்தைகளான மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் சிக்கிக் கொண்டனர். நள்ளிரவு வரை மழை தொடர்ந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை முழு வேகத்தில் மீட்பு பணி துவங்கியது. பாதைகள் குறுகலாகவும், வீடுகள் நெருக்கமாகவும் இருந்ததால் கனரக வாகனங்கள் கொண்டு செல்ல முடியாமல் மீட்பு பணி நேரமெடுத்தது. மதியம் சிறிய அளவிலான ஹிட்டாச்சி கொண்டு வரப்பட்டது. மாலை ஒரு ஜேசிபி மீட்பு பணியில் கை கோர்த்தது. தேசிய பேரிடர் குழு, தீயணைப்பு வீரர்களின் 12 மணி நேர தேடுதலுக்கு பின் மாலை 6 மணியளவில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. அடுத்த கட்டமாக தென்பட்ட 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. மண் சரிவில் சிக்கியவர்கள் அடுத்தடுத்து சடலமாக மீட்கப்படுவதால் அவர்களதுஉறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை