/ தினமலர் டிவி
/ பொது
/ 7 பேரின் கதி என்ன? மீட்பு பணிக்கு விரையும் பேரிடர் படை | Tiruvannamalai Landslide
7 பேரின் கதி என்ன? மீட்பு பணிக்கு விரையும் பேரிடர் படை | Tiruvannamalai Landslide
திருவண்ணாமலையில் நிலச்சரிவு வீடுகள் மீது உருண்டு வந்த பாறை பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள தீப மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வஉசி நகரில் மண் சரிந்தும், பாறைகள் உருண்டு விழுந்தும் இரண்டு வீடுகளை மூடியுள்ளது. இது குறித்து பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இடிபாடுகளில் 7 பேர் இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
டிச 02, 2024