சென்னையின் பிரசித்தி பெற்ற கோயிலில் தொடரும் அவலம்! | Vadivudayamman Temple | Tiruvottiyur
இது மழைநீர் சேமிப்பா? இல்ல கழிவு நீர் சேமிப்பா? கொந்தளிக்கும் பக்தர்கள் சென்னை, திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கோயிலின் வெளிப்புறம் உள்ள குளத்தில் நீர் இன்றி வறண்டு காணப்பட்டது. மழை காலத்தில் மட்டும் நான்கு மாட வீதிகளில் உள்ள மழை நீரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நீர் சில மாதங்களிலேயே வற்றி விடுகிறது. குளம் வறண்டு போவதை தடுக்க மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டியதால் மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீர் கலந்து விடுகிறது. கழிவு நீர் கோயில் குளத்தில் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது.