உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழவந்தாங்கலை தொடர்ந்து திருவொற்றியூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! Tiruvottiyur | Sexual Harassment

பழவந்தாங்கலை தொடர்ந்து திருவொற்றியூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! Tiruvottiyur | Sexual Harassment

சென்னையில் பணி புரியும் பெண் ஒருவர், கடந்த 28ம் தேதி கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் திருவொற்றியூர் வரை பயணம் செய்தார். திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு இரவு சுமார் 8 மணி அளவில் ரயில் சென்றுள்ளது. ரயிலில் இருந்து இறங்கிய பெண் பாலம் நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆசாமி பெண்ணின் உடலை தவறாக தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டான். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிடவே அவன் ஓடி மறைந்தான். பெண்ணின் புகாரில் பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். சென்னை சென்ட்ரல் காவல் துணை கண்காணிப்பாளர் கர்ணன், கொருக்குப் பேட்டை காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்த போது சம்பவத்தில் ஈடுபட்டது, வண்ணாரப் பேட்டையை சேர்ந்த டில்லி பாபு என்பது தெரிந்தது.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி