உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிவு வராவிட்டால் தலைமை செயலகம் முற்றுகை! | Tito-Jac | Teachers Protest

முடிவு வராவிட்டால் தலைமை செயலகம் முற்றுகை! | Tito-Jac | Teachers Protest

மத்திய அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற போராட்டம் நடத்த போவதாக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ - ஜாக் அறிவித்தது. 22ல் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்திருந்தது. டிட்டோ - ஜாக் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பேச்சு நடத்தினார். கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், முக்கிய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாகவும் அவர் உறுதி அளித்தார். தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த டிட்டோ - ஜாக் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மகேஷுக்கு 22ம் தேதி வரை அவகாசம் வழங்க முடிவு எடுத்துள்ளனர். அதற்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ