உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சம்பவம் ; தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் | TN BSP Leader | Armstrong case

ஆம்ஸ்ட்ராங் சம்பவம் ; தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் | TN BSP Leader | Armstrong case

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி தனது வீட்டின் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை முன்னெடுத்துள்ள ஆணையம் தமிழக தலைமை செயலர் மற்றும் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நிலவரம், கொலைக்கான பின்புலம் போன்ற விவரங்கள் நோட்டீஸில் கேட்கப்பட்டு உள்ளன.

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை