உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட் அறிவிப்பால் பரந்தூரில் பதற்றம் | TN budget 2025 | Parandur | Parandur AirPort

பட்ஜெட் அறிவிப்பால் பரந்தூரில் பதற்றம் | TN budget 2025 | Parandur | Parandur AirPort

பட்ஜெட்டில் சொன்ன அந்த வார்த்தை கொந்தளிக்கும் பரந்தூர் பகுதி மக்கள் டிஸ்க்: சென்னை சர்வதேச விமான நிலையம் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி மக்கள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அடுத்த 10 வருடங்களில் இது 8 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க சென்னை பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும் என நிதி அமைச்சர் தென்னரசு அறிவித்துள்ளார். ஏற்கனவே பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் சுமார் 1,000 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் இந்த அறிவிப்பு பரந்தூர் பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாய பெருங்குடி மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று அடம் பிடிக்கிறது தமிழக அரசு. விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தமிழகத்திற்கான இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை விரைவுபடுத்வோம் என்று அறிவித்துள்ளது. இது மக்களை மனம் கலங்க செய்து கண்ணீர் வடிக்கின்ற அறிவிப்பாக உள்ளது என்பதை திமுக அரசு தயவு கூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். உள் நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலையில் உள்ள விவசாய பெருங்குடி மக்களின் உணர்வுகளை உள்வாங்கி இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை நேரில் சந்திக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !