உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரச்னைக்கு தீர்வு என்ன? மீனவர்கள் சொல்லும் வழி tn fishermen issue| srilanka

பிரச்னைக்கு தீர்வு என்ன? மீனவர்கள் சொல்லும் வழி tn fishermen issue| srilanka

ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை, 4,000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கின்றனர். ராமேஸ்வரம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை இந்திய கடல் எல்லை 13 முதல் 21 நாட்டிக்கல் மைல் கொண்டுள்ளது. குறுகிய எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது சில நேரம் மீன் வரத்திற்காக எல்லை தாண்டி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குகின்றனர். மீனவர்களை கைது செய்து, சிறையில் அடைக்கின்றனர். இலங்கையில் 1984 முதல் 2009 வரை ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே உள்நாட்டு போர் நடந்த நேரத்தில் பாக் ஜலசந்தி கடலில் புலிகளின் கடற்படை பிரிவு வலுவாக இருந்தது. இதை பயன்படுத்தி இப்பகுதி மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்தனர். விடுதலை புலிகள் தலைவர்கள் 2009ல் கொல்லப்பட்டதும், இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்கள் பக்கம் திரும்பியது. 2009 முதல் தற்போது வரை 3ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 400 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். 2015க்கு பின் 300 படகுகள், 2000த்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2015க்கு முன் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இப்படகுகளை இலங்கை அரசு தேசிய உடைமையாக அறிவித்து உள்ளது. படகுகளை இழந்த உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து, கடனில் சிக்கி தவிக்கும் அவலம் ஏற்பட்டது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ