உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவர்னருடன் மோதல், வேந்தர் விவகாரத்தில் வீண் பிடிவாதம்: சித்தா டாக்டர்கள் வேதனை TN Government Should

கவர்னருடன் மோதல், வேந்தர் விவகாரத்தில் வீண் பிடிவாதம்: சித்தா டாக்டர்கள் வேதனை TN Government Should

தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துமனைகள், பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கும் மசோதா 2022ல் சட்டசபையில் நிறைவேறியது. இதன் வேந்தராக, முதல்வர் செயல்படுவார்; துணை வேந்தர் உட்பட முக்கிய பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கே அதிகாரம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சித்தா பல்கலைக்காக சென்னை மாதவரத்தில் 25 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், யுஜிசி எனப்படும் பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு புறம்பாக பல்கலை வேந்தராக முதல்வரை நியமிப்பது குறித்து, கவர்னர் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு அளித்த பதில் திருப்தி அளிக்காததால், மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். ஆனால், அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. இதையடுத்து, இந்த மசோதா மீது முடிவெடுக்கும் படி, அதை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி. தமிழக அரசின் பிடிவாதத்தால் சித்தா பல்கலை அமைவதில் இழுபறி நீடிப்பதாக சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #TNSiddhaUniversity| #Siddha| #TNGovernment| TNGovernor| DMK| Stalin| RNRavi| SiddhaMedicine

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை