உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி உத்தரவு TN Governor | Rajendra Arlekar | Droupadi Murmu

கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி உத்தரவு TN Governor | Rajendra Arlekar | Droupadi Murmu

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். கேரள கவர்னர் அர்லேக்கரிடம் தமிழக கவர்னர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. மார்ச் முதல் இப்பொறுப்பில் அவர் உள்ளார். இப்போது தமிழகம், கேரளா, கர்நாடகா என 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், கேரள கவர்னராக பதவி வகித்து வரும் அர்லேகர், தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் கவர்னராக உள்ள ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரளா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக டாக்டர் சுதா யாதவும், ஒடிசா மாநில கவர்னராக பிரஜ் மோகன் ராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநில கவர்னராக தால் சிங் பிசேன்; சிக்கிம் கவர்னராக துஷ்யந்த் கவுதம் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். #TNGovernor #NewGovernor #RajendraArlekar #TamilNaduGovernor #RashtrapatiBhavan #GovernorAppointment #NationalNewsTamil #DinamalarNews

அக் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !