குழப்பத்துக்கு விளக்கம் கொடுத்த சுகாதாரத்துறை | TN Govt | CM Vijay | Gold Ring scheme
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் சென்ற 28ம் தேதி துவங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த, பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 1 கிராம் எடையில் ஹால்மார்க் முத்திரை பதித்த 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும். மோதிரம் பெறுவதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. மருத்துவமனை மற்றும் பிறப்பு பதிவுகளின் அடிப்படையில், தகுதி சரிபார்க்கப்பட்டு நேரடியாக வழங்கப்படும். திட்டத்தில் பயன் பெற உள்ள குழந்தையின் தாய் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பிற மாநிலத்தில் வசித்து தமிழகத்தில் பிரசவத்துக்காக வந்து குழந்தை பெற்றால் மோதிரம் வழங்கப்படாது. ஆதாரில் உள்ள முகவரி சரி பார்ப்புக்கு பின்பே இது உறுதி செய்யப்படும் என சுகாதாரத்துறை விளக்கமளித்து உள்ளது. #TNGovt | #CMVijay | #GoldRingscheme | #ThaiMamanRing | #GovtHospital