10KM வேகம்... தமிழகம் நோக்கி டிட்வா புயல் tn heavy rain alert today | chennai imd | cyclone ditwah
இலங்கை கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. அதற்கு டிட்வா Ditwah என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் தொடர்ந்து தமிழகம் நோக்கி வருவதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: இலங்கை கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியபடி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. காலை 8:30 மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 40 கிலோ மீட்டர், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே 320 கிமீ, புதுச்சேரியில் இருந்து 430 கிமீ, சென்னையில் இருந்து 530 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. #CycloneDitwah #ChennaiHeavyRain #IMDRainToday #IMDChennai #ChennaiWeather #TamilNaduWeather #RainAlert #HeavyRain #WeatherUpdate #StormWarning #Monsoon2025 #RainfallPrediction #ChennaiForecast #TamilNaduFlood #ChennaiRainfall #WeatherApp #IMDUpdates #RainyDays #TamilNaduNews #ChennaiStatus