உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரொக்கம் இல்லாததால் மக்கள் புறக்கணிப்பு! | TNgovt | Pongal Gift | Ration shop

ரொக்கம் இல்லாததால் மக்கள் புறக்கணிப்பு! | TNgovt | Pongal Gift | Ration shop

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி கார்டுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. ரேஷன் கடைகளில் ஜனவரி 9ம் தேதி முதல் 13 வரை வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் பணம் இல்லாததால் பலர் வாங்க முன்வரவில்லை. 1.87 கோடி பேர் வாங்கி இருந்தனர். நாளை வரை வாங்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை வாங்காதவர்களை போனில் தொடர்பு கொண்டு வாங்கி செல்ல ரேஷன் ஊழியர்கள் அழைக்கின்றனர். இதுகுறித்து ஊழியர்கள் கூறியதாவது: அரசின் பொங்கல் பரிசு வாங்காதவர் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட அதிகம் உள்ளது. அதிகம் பேர் வாங்கியதாக பதிவு செய்ய அனைத்து கார்டுதாரர்களுக்கும் தொகுப்பை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அறிவுறுத்தலின்படி, வாங்காத கார்டுதாரர்களை அழைக்கிறோம். ஒருசிலர் வந்து வாங்கி செல்கின்றனர் என்றனர்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை