மத்திய அரசின் எச்சரிக்கை புறக்கணிப்பு! TN Rain Affect | Sathanur Dam | Rain Alert
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பெய்த கனமழை காரணமாக வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் குறித்து மத்திய அரசு அலர்ட் செய்த போதிலும் அதை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. மத்திய அரசு நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளாவுக்கு அடுத்தடுத்து புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அணைகள் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை, கோமுகி, பூண்டி, செம்பரம்பாக்கம், வெலிங்டன் அணைகளுக்கு நீர்வரத்து அபரிமிதமான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னர் அணையில் இருந்து நீரை திறக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அப்படி செய்யாமல் சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 72 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட்டதால் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.