உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை கொட்டித்தீர்க்க போகும் கனமழை | TN Rain Alert | IMD

தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை கொட்டித்தீர்க்க போகும் கனமழை | TN Rain Alert | IMD

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், அதில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிககனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். 21ம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. 22ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். 23ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும். 24 மற்றும் 25ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #ChennaiToKanyakumari #HeavyRains #TamilNadu #MeteorologicalUpdate #WeatherAlert #RainForecast #StormWarning #TamilNaduWeather #Kanyakumari #ChennaiWeather #WeatherUpdates #RainySeason #Downpours #StormTracking #WeatherNews #StaySafe #FloodWarning #Forecast2026 #TamilNaduRain #TamilNaduUpdates

அக் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !